;
Athirady Tamil News

துணை ஜனாதிபதி இல்லத்தில் குரங்குகள் அட்டகாசம்..!!

0

டெல்லியில் அதிகரித்துவரும் குரங்குகளின் தொல்லை தொடர்பாக பாராளுமன்ற மேல்சபையில் இந்திய தேசிய லோக்தள உறுப்பினர் ராம் குமார் காஷ்யாப் குறிப்பிட்டு பேசினார்.

வீடுகளில் உள்ள செடிகளை பறித்து வீசுவதுடன், காயப்போடும் உடைகளை எடுத்துச் சென்று நாசப்படுத்தும் குரங்கு கூட்டத்தின் தொந்தரவுக்கு தீர்வு காண்பது தொடர்பாக அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

வரும் வழியில் குரங்குகளால் தாக்கப்பட்ட ஒரு எம்.பி. குறிப்பிட்ட நேரத்தில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதை கேட்டுக் கொண்டிருந்த மேல்சபை சபாநாயகரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ அரசு இல்லத்திலும் குரங்குகளின் தொல்லை அதிகமாகதான் இருக்கிறது என குறிப்பிட்டார். நல்லவேளை (மத்திய மந்திரியும் விலங்குகள் நல ஆர்வலருமான) மேனகா காந்தி இப்போது அவையில் இல்லை என அவர் வேடிக்கையாக கூறி சிரித்தார்.

டெல்லியில் குரங்குகள் தொல்லை குறைய ஏதாவது தீர்வு காணப்பட வேண்டும் என பாராளுமன்ற விவாகரங்கள் துறை மந்திரி விஜய் கோயலை துணை ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 16 =

*