;
Athirady Tamil News

விபத்தில் ஒருவர் பலி – பொலிஸ் மீது கத்திக்குத்து..!!

0

தம்புள்ள – ஹபரண பிரதான வீதியின் பெல்வெஹேர பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் சொகுசு கார் ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நேற்று (23) இரவு 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பெல்வெஹேர பகுதியை சேர்ந்த 38 வயதுடைய அஷோக லால் என்ற 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சொகுசு கார் மிக வேகமாக தம்புள்ள பிரதேசத்தில் இருந்து சீகிரிய பிரதேசத்தை நோக்கி பயணித்துள்ள நிலையில், திடீர் என மோட்டார் சைக்கிள் எதிர்பக்கத்தில் இருந்து திருப்பும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தை தொடர்ந்து அந்த இடத்தில் ஒன்று கூடிய பிரதேச மக்கள் மிகவும் கோபமான முறையில் நடந்து கொண்டுள்ளனர்.

சொகுசு காரின் ஓட்டுனர் அந்த இடத்தில் இருந்த சிலரின் உதவியுடன் தம்புள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கோபமாக நடந்து கொண்ட பிரதேச மக்கள் சொகுசு காரை தீ வைக்க முற்பட்ட போது அதனை தடுத்து நிறுத்த முற்பட்ட தம்புள்ளை பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவரை நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கத்தியால் தாக்குதல் மேற்கொண்டு சந்தேக நபர்கள் குறித்த பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 11 =

*