;
Athirady Tamil News

விக்ஸ்காடு வன இலகா பகுதியில் காணி அபகரிப்பில் அரசியல் கட்சி உறுப்பினர் அடாவடி..!! (படங்கள்)

0

வவுனியா விடு பகுதியில் 47 குடும்பங்களை குடி அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அங்கு அரசியல் கட்சி உறுப்பினர் அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்;த ஒருவரினால் அப்பகுதியில் நேற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா விக்ஸ்காடு பகுதி வன இலகா திணைக்களத்தின் பூரண கட்டுப்பாட்டிலிருந்து வருகின்றது. அப்பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சட்டவிரோதமான முறையில் காணி அபகரிப்பு நடவடிக்கை பொது மக்களால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் தலையீட்டால் அப்பகுதியில் காணி அபகரித்தவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு அவர்களுக்கு காணி வழங்குவதற்கு வன இலகா அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பிரதேச செலயகத்தினால் 47 குடும்பங்களின் விபரங்கள் திரட்டப்பட்டு கொழும்பு தலைமை வன இலகா திணைக்கள அலுவலகத்திற்கு காணி விடுவிப்பதற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அப்பகுதியில் காணி அபகரித்து தமக்கான எல்லைகளை இட்டு அங்கு வசித்துவரும் ஒருவரின் காணியை வலுக்கட்டயமாக அபகரித்து குறித்த அரசியல் கட்சியின் உறுப்பினரால் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனது காணி என உரிமை கோரியவர் சென்று தனது அடையாளமிடப்பட்ட காணிக்குள் வேலி அமைக்கப்பட்டுள்ளது இங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு தெரிவித்து அரசியல் கட்சியின் உறுப்பினருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்

இதையடுத்து குறித்த அரசியல் கட்சியின் உறுப்பினர் பொலிசாரி உதவியை நாடியதுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட நபரை பொலிசார் கைது செய்யும் நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து இன்று காலை 9மணியளவில் பிரதி அமைச்சர் காதர் மஸ்தானின் அலுவலகத்தில் விக்ஸ்கட்டில் வசித்தவரும் 50ற்கும் மேற்பட்டவர்கள் சென்று அரசியல் கட்சி உறுப்பினரின் நடவடிக்கையினை தடுத்து நிறுத்துமாறும் அவரால் நாங்கள் உயிர் வாழ முடியவில்லை எதற்கு எடுத்தாலும் சட்டவிரோதமான முறையில் நடவடிக்கையினை பொலிசார், கிராம அலுவலகருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றார்.

இந்நடவடிக்கையினை தடுத்து நிறுத்துமாறும் குறித்த அரசியல் கட்சியின் உறுப்பினர் அங்கிருந்து வெளியேறுமாறும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

இதையடுத்து நேற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டவரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்துவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + six =

*