;
Athirady Tamil News

புளியம்பொக்கனையில் கசிப்பு நிலையம் முற்றுகை..!! (படங்கள்)

0

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் இயங்கிய கசிப்ப உற்பத்தி நிலையத்தை இன்று முற்றுகையிட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட போதைப்பொருள் மற்றும் துஸ்பிரயோக தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சதுரங்க தெரிவித்தார்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலினை அடுத்து, பொறுப்பதிகாரி சதுரங்க தலமையில் சென்ற பொலிஸ் குழுவினர் இடத்தினை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பொலிஸாரைக் கண்ட கசிப்பு உற்பத்தியாளர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். குறித்த நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கிருந்த சான்றுப் பொருள்களை மீட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 12 =

*