;
Athirady Tamil News

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில்- 5 நிறுவனங்களே இயக்கம்..!!

0

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையினை மீளவும் கட்டி எழுப்ப 100 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது. இங்கே தற்போது 39 பிளக்கில் 13 நிறுவனங்கள் நிலத்தினைப் பெற்ற போதும் 5 நிறுவனங்களே இயங்குவதாக தொழில் திணைக்கள அதிகாரி தெரிவித்தார் .

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொழில் திணைக்கள அதிகாரி மேலும் தெரிவித்ததாவது,

அச்சுவேலித் தொழில் பேட்டையானது 1972ல் ஆரம்பித்து பின்னர் 2000 பணியாளர்களுடன் இயங்கியது. ஆனால் தற்போது 5 நிறுவனங்கள் மட்டுமே இயங்குகின்றன. அதாவது 2012ல் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்பு தற்போது மின்சார சலுகை வழங்கப்படுகின்றது.

அதில் ஒரு நிறுவனத்துக்கு மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபா மின்சார பட்டியல் வரும் நிலையில் அதில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படுகின்றது. அவ்வாறே அனைவருக்கும் வழங்கப்படும். அதனால் ஏனையோரும் முன்வர வேண்டும்.

அச்சுவேலி தொழில் பேட்டைக்கு மொத்தம் 65 ஏக்கர் நிலம் உள்ளது. இதல் 25 ஏக்கரே தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதனால் மேலும் 22 ஏக்கர. நிலம் துப்பரவு செய்ய நடவடிக்கை இடம்பெறுகின்றது.்என்றார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவான், இத் தொழிற்சாலைக்கு இந்தியா 20 கோடி உதவியது. அதேநேரம் நாட்டில் உள்ள ஏனைய தொழில் பேட்டைகள் அனைத்திலும் கட்டடத்தினையும் கட்டி வழங்கியே வாடகையினை பெறுகின்றனர்.்ஆனால் இங்கு மட்டுமே வெறும் நிலத்திற்கு வாடகை வழங்கப்படுகின்றது எனில் எவ்வாறு முதலீட்டாளர்கள் முன்வருவார்கள். போரிற்கு முன்பும் கட்டடம் வழங்கப்பட்டது.

அத்தோடு உள்ளக வீதிப் புனரமைப்பு மட்டுமே இடம்பெற்றபோதும் பிரதான வீதிகூடத் திருத்தவில்லை. இதேநேரம் விரைவில் காங்கேசன்துறையில் ஓர் தொழில்பேட்டை உருவாகவுள்ளது. அச்சுவேலி தொழில்பேட்டைக்கு போதிய வசதி ஏற்படுத்தாதுவிடின் நிலமை மோசமடையும் என்று சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 5 =

*