;
Athirady Tamil News

யாழ் மாவட்ட தாச்சி சங்க அனுசரணையுடன் தாச்சி சுற்று போட்டி..!!

0

யாழ் மாவட்ட தாச்சி சங்க அனுசரணையுடன் கைதடி மத்தி வளர்மதி விளையாட்டு கழகம் தனது 59ம்ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடத்திய தென்மராட்சி ரீதியான தாச்சி சுற்று போட்டியின் இறுதி போட்டியில் கைதடி குமரநகர் விளையாட்டு கழகம் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் கைதடி குமரநகர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நாவற்குழி சரஸ்வதி விளையாட்டு கழகம் மோதியது.

இப் போட்டியில் 4.2 என்ற புள்ளியில் கைதடி குமரநகர் விளையாட்டு கழகம் வெற்றியை தனதாக்கியது. இத் தாச்சி சுற்றுப்போட்டியின் சிறந்த தொடர்ஆட்டநாயகனாக நாவற்குழி சரஸ்வதி விளையாட்டு கழகத்தின் லதுசன் தெரிவு செய்யப்பட்டார்.

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக குமரநகர் விளையாட்டு கழகத்தின் எழுச்சி தெரிவு செய்யப்பட்டார். இறுதிப் போட்டியின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*