மத்திய வங்கி ஆளுனருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ரஞ்சன்..!! (வீடியோ)

ETI நிறுவனத்தின் பண வைப்பாளர்கள் நேற்று (24) பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்தனர்.
மாதிவெல பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே அவர்கள் பிரதி அமைச்சரை சந்தித்துள்ளனர்.
இதன்போது பண வைப்பாளர்கள், தாங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதி அமைச்சரிடம் விளக்கமளித்துள்ளனர்.
பின்னர் பிரதி அமைச்சர், மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசாமிக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டார்.
இதன்போது மத்திய வங்கி ஆளுனர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் வந்ததன் பின்னர் பண வைப்பாளர்களுக்கு தீர்வு ஒன்றை வழங்க சம்மதம் தெரிவித்தாகவும் மங்கள சமரவீர உறுதியளித்ததாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.