;
Athirady Tamil News

தீயை அணைக்க சென்றவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழப்பு..!!

0

வெலிகந்த, நாமல்கம பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் இன்று (25) அதிகாலை 3 மணி அளவில் யானை தாக்குதலுக்கு இலக்காகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது வீட்டின் முற்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க முற்பட்ட வேளையே இந்த யானை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் 62 வயது நிரம்பிய எல். எம். திஸாநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெலிகந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*