;
Athirady Tamil News

கொலை குற்றத்திற்காக 6 வருடம் விளக்கமறியலில் இருந்த பெண் விடுதலை..!!

0

2012 ஆம் ஆண்டு இரத்தினபுரி, கொடகெதன பகுதியில் தாய் மற்றும் மகளை கொலை செய்த குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரை நிரபராதி என விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராய்ச்சி இன்று (25) தீர்பளித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி கொடகெதன பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நயனா நில்மினி எனும் தாயும் அவருடைய 17 வயதுடைய மகளான காவிந்தியா சதுரங்கி என்பவரையும் கொலை செய்த சம்பவம் தொடர்பில் லொகுகம்ஹேவாகே தர்சன (ராஜூ) மற்றும் அவருடைய மனைவி சாந்தனீ குமாரி (பட்டி) ஆகிய இருவர் மீது சட்டமா அதிபரினால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் சாந்தனீ குமாரி எனும் பிரதிவாதி மீது சுமத்தப்பட்டிருந்த குற்றம் தொடர்பில் உரிய சாட்சிகளை முன்வைக்காத காரணத்தால் பிரதிவாதியை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.

இருப்பினும் முதலாவது குற்றவாளியான லொகுகம்ஹேவாகே தர்சன என்பவருக்கு எதிராக உரிய சாட்சிகளை முன்வைக்குமாறும் சந்தேக நபரை நவம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 4 =

*