;
Athirady Tamil News

சூரிய மின் உற்பத்தி நிலையத்தால் மக்களுக்கு சுவாச பிரச்சினை..!!

0

வவுனியா, மாமடுவ பகுதியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையம் காரணமாக சுற்றியுள்ள மக்கள் சமூக பிரச்சினை உட்பட சுகாதார பிரச்சினைகளுக்கும் ஆளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் 60 ஏக்கர் நிலப்பரப்பில் இதுவரையில் சூரிய சக்தி மின் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதுடன் அது போன்ற மற்றுமொரு இடத்திலும் மின் கட்டமைப்பு அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முதலில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட மின் நிலையம் தற்போது சுற்றியுள்ள காணிகளை எல்லாவற்றையும் ஒரு நிறுவனம் கொள்வனவு செய்து எல்லா இடத்திலும் மின் கட்டமைப்பபை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த பிரதேசத்தை சுற்றியுள்ள கார்தாசின்னகுளம், நெடுங்குளம், எட்டம்பகஸ்கட, அண்ணாநகர் மற்றும் பூந்தோட்டம் உட்பட பல்வேறு கிராமங்கள் இருப்பதுடன் அப்பகுதிகளில் மழை மேகம் வரும்போது இந்த மின் நிலையத்தில் இருந்து வான் நோக்கி ஒருவகை புகை வெளியிடப்படுகிறது.

இந்த புகை மிகவும் விஷத்தன்மை உடையதாகவும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு சுவாசிக்க கஷ்டமாக இருப்பதால் தமது குழந்தைகள் சுகாதார ரீதியாக பாதிப்புக்கு உள்ளாவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மின் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அப்பகுதியில் வெப்பநிலை அதிகரித்து இருப்பதாகவும் இது தொடர்பில் பல்வேறு சுற்றாடல் சார்ந்த நிறுவனங்களுக்கு அறிவித்து இருப்பினும் எவரும் இதுவரையில் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − 1 =

*