;
Athirady Tamil News

பிறந்து ஒரு நாளான குழந்தை ஒன்று வீதி ஓரத்தில் இருந்து கண்டெடுப்பு..!!

0

பிறந்து ஒரு நாள் மட்டும் கடந்த நிலையில் குழந்தை ஒன்றை தம்புள்ளை, பொகோரன்வெவ பகுதி வீதி ஓரத்தில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட வீதி ஊடாக பயணித்த ஓட்டுனர் வீதி ஓரத்தில் குழந்தை ஒன்று இருப்பதை கண்ட நிலையில், தம்புள்ளை பொலிஸாருக்கு இன்று (25) காலை அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் குழந்தையை மீட்டு, தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதேவேளை, குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருப்பதுடன், குழந்தையின் தாயை தேடும் நடவடிக்கைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − 2 =

*