;
Athirady Tamil News

வகுப்பறையில் திடீர் மாரடைப்பு – மாணவர்கள் கண்முன்பே ஆசிரியர் உயிரிழப்பு..!!

0

ஈரோடு திண்டல் நாராயணவலசு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது54). இவர் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பெரியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றினார். இதற்காக பஞ்சப்பள்ளி பகுதியில் நண்பர்களுடன் வீடு எடுத்து தங்கி இருந்தார். அங்கு இருந்து பள்ளிக்கு சென்று வந்தார்.

நேற்று வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து கொண்டு இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக பிக்கிலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் மீண்டும் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் எடுத்தார். மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மாணவர்கள் கண்முன்னே வகுப்பறையில் விழுந்து இறந்து போனார்.

இறந்துபோன ஆசிரியருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + eighteen =

*