;
Athirady Tamil News

மொனராகலயில் 14 குடும்பங்களுக்கு சட்ட ரீதியாக திருமணம்..!!

0

மொனராகல. பிரதேச செயலக பிரிவுக்குள் பல ஆண்டுகளாக சட்ட ரீதியாக திருமணம் செய்து கொள்ளாதிருந்த 14 குடும்பங்கள் சட்டரீதியாக திருமணம் செய்து கொண்டுள்ளன.

மொனராகல. பிரதேச செயலாளர் கீதா சிறியானி பத்மகுலசூரியவின் தலைமையில் அண்மையில் இந்த திருடணங்கள் நடந்ததாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

தேவையான தகவல்களை திரட்டியதன் பின்னர் 14 குடும்பங்களுக்கும் சட்ட ரீதியாக திருமணம் செய்து வைத்ததாக மொனராகல. பிரதேச செயலக அலுவலகம் கூறியுள்ளது.

மொனராகல பார்வதி வித்தியாலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதுடன், மேலும் பல குடும்பங்கள் சட்ட ரீதியாக திருமணம் செய்து கொள்ளாதிருப்பதாக பதிவாகியுள்ளது.

பொருளாதார பிரச்சினை மற்றும் சரியான புரிந்துணர்வின்மை இதற்கு பிரதான காரணம் என்று பிரதேச செயலக அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*