;
Athirady Tamil News

வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக இதுவரை 36 குற்றச்சாட்டுக்கள்- ஜி.ரி.லிங்கநாதன்..!!

0

வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக இதுவரை 36 குற்றச்சாட்டுக்கள்: வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளரும் அவருடன் இணைந்து சில உத்தியோகத்தர்களுக்கு எதிராக இதுவரை 36 இற்கு மேற்பட்ட ஊழல் மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் சம்மந்தமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் செயற்பாடு தொடர்பில் கேட்டபோதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா வடக்கு பிரதேசத்தில் பிரதேச செயலாளரும் இன்னும் சில உத்தியோகத்த்ர்களும் இணைந்து மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். யுத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிதிகள் மோசடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வாழ்வாதாரம், காணி கையகப்படுத்தல், சமுர்த்தி வங்கி மோசடி, அதிகார துஸ்பிரயோகம் என 36 மோசடிகள்
தொடர்பில் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதில் காணி தொடர்பான முறைகேடுகளே அதிகமாக உள்ளன. இன்னும் பலர் பல்வேறு மோசடிகளை வெளிப்படுத்த தயாராகவுள்ளார்கள். விரைவில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் அவருடன் இணைந்து மோசடியில் ஈடுபட்ட உத்தியோகத்தர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதுடன், கிடைக்கப்பெற்ற ஆவணங்களையும் விசாரணைக்காக வழங்கவுள்ளேன் எனத் தெரிவித்தார்.

வுனியா வடக்கில் குறித்த பிரதேச செயலாளாரின் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளவும். குறித்த ஆதாரங்களை திரட்டி லஞ்ச ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட ஊழல் ஒழிப்பு அமைப்புக்களிடம் கையளித்து பல ரூபாய் மோசடியை அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுப்பேன்.

எனக்கு எதிராக போராட்டம் செய்வதாக கூறி ஒரு மோசடியான பிரதேச செயலாளருக்காக போராட்டம் நடத்திய இளம் பட்டதாரி உத்தியோகர்தர்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன். வவுனியா வடக்கில் குடியேற்றங்கள் வந்த போது ஏன் ஒரு ஆர்ப்பாட்டத்தை உங்களால் நடத்த முடியாமல் போனது. அல்லது ஏன் பாதிக்கப்படட மக்களுக்கு முழுமையாக உதவி செய்ய முடியாமல போனது. ஊழலை ஏன் தடுக்க முடியாமல் போனது என கேள்வி கேட்கின்றேன். தனவந்தர்களும், அரசியல் செல்வாக்கு உடையவர்களும், வெளிநாட்டுக்காரும் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இலகுவாக தமது தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள். சாதாரண மக்கள் பாதிக்கபடுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு புதன்கிழமையும் அலைந்து திரிகிறார்கள். விசாரணையின் மூலம் வவுனியா வடக்கின் மோசடிகள் அம்பலத்திற்கு வரும எனத்தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − 1 =

*