;
Athirady Tamil News

’மரண தண்டனை தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை’..!!

0

மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த திகதியை தீர்மானிப்பது மற்றும் தண்டனையை எதிர்நோக்கும் கைதிகளை பெயரிடுவது தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதிகாரத்தை ஒரு குழுவுக்கு வழங்க முடியாது எனத் தெரிவிக்கும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, அவ்வாறு தனக்கிருக்கும் அதிகாரத்தை ஒரு குழுவுக்கு வழங்குவதற்கு அரசாங்கத்தின் தலைமைக்கும் முடியாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சிறைக்கைதிகளை தண்டிக்கவும், மன்னிப்பு வழங்கவும் அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதிக்கு மாத்திரமே முடியுமென சுட்டிக்காட்டிய முன்னாள் பிரதம நீதியரசர், அவ்வாறு தனக்குள்ள அதிகாரத்தை ஒரு குழுவுக்கு வழங்கும் செயற்பாடானது அரசியல் யாப்பை மீறும் செயல் எனவும் குறிப்பிட்டார்.

அரசியல் அமைப்பில் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதன் ஊடாக ஜனாதிபதி குழுக்கள், நியமனங்கள் மற்றும் ஆணைக்குழுக்களை அமைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுவதாகவும், எனினும் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த திகதியை தீர்மானிப்பது மற்றும் தண்டனையை எதிர்நோக்கும் கைதிகளை பெயரிடுவது தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதிகாரத்தை ஒரு குழுவுக்கு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குழு ஒன்றுக்கு கைதிகளை தூக்கிலிடுவது தொடர்பிலான திகதியை தீர்மானிப்பதற்கான அதிகாரம் வழங்கப்படுமாயின் அதற்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் அவசியமெனவும் சில்வா தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதியால் தற்போது நியமிக்கப்பட்டுள்ள குழு எந்த நோக்கத்திற்காக அமைப்பட்டுள்ளது? அந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு குறித்த வழக்குத் தொடர்பிலும் குற்றவாளிகள் தொடர்பிலும் காணப்படும் அறிவு தொடர்பிலும் குழப்பநிலை காணப்படுவதாகவும் முன்னாள் நீதியரசர் சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + five =

*