;
Athirady Tamil News

ஏற்றுமதி மூலம் வருவைாய் ஈட்டிக்கொள்வது தொடர்பிலான வேலைப்பட்டறை கிளிநொச்சியில்..!! (படங்கள்)

0

சேதன விவசாயத்தின் மூலம் விவசாய உற்பத்திகளை மேற்கொண்டு ஏற்றுமதி மூலம் வருவைாய் ஈட்டிக்கொள்வது தொடர்பிலான வேலைப்பட்டறை இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண ஆளுனர் ரெயினோல்ட் குரே அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் அமைந்துள்ள விவசாய பயிற்சி பண்ணையில் குறத்த நிகழ்வு இடம்பெற்றத. இந்தியாவை சேர்ந்த சேதனமுறை விவசாயத்தினால் ஏற்றுமதியை மேற்கொள்வது தொடர்பில் பிரசித்தி பெற்ற வைத்திய கலாநிதி மனோகரன் கிருஸ்ணா குறித்த வேலைப்பட்டறையை முன்னெடுத்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ரேயிலோல்ட் குரே மற்றும் மு.பா . உறுப்பினர் சந்திரகுமார் ஆளுனர் செயலாளர், பிரத்தியேக செலலாளர், விவசாய திணைக்கள அதிகாரிகள், சேதனமுறை விவசாய செய்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*