;
Athirady Tamil News

விக்னேஸ்வரனின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானம்..!!

0

வடக்கு மாகாண மீன் பிடித்துறை முன்னாள் அமைச்சர் பி.​டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05ம் திகதி அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (26) புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.

அன்றைய தினம் இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு மனுதாரர் சார்பான சட்டத்தரணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.​டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி.​ டெனிஸ்வரனை மேன்முறையீடு செய்திருந்தார்.

அதன்படி பி.​டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை கூறத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × four =

*