;
Athirady Tamil News

வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மக்கள் விழிப்படைய வேண்டும்! ரெஜினோல்ட் குரே..!!

0

வடக்கில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில், மக்களே சிந்தித்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு சென்றுள்ள வடக்கு ஆளுநர், இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தார்.

இதன் போது, வடக்கில் இடம்பெறும் வாள்வெட்டுக்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “குறித்த செயற்பாடுகள் தொடர்பில் சமூகமே விழிப்படைய வேண்டும். இப்போதுள்ள இளைஞர்கள் இணையத்தளம், தொலைபேசி பாவணையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவற்றினால் உறவினர்கள் வந்தால் கூட அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு விரும்புவதில்லை. மாறாக தனிமையில் இருக்கவே விரும்புகின்றனர். தனிமையிலிருந்து மோசமன திரைப்படங்களை பார்த்து அதற்க்கு ஏற்ப தம்மை செயற்படுத்த விரும்புகின்றனர்.

இந்த நிலையை மாற்றுவதற்கு சமூகமே முன்வர வேண்டும். எனவே இது தொடர்பில் பெற்றோர் கூடிய கவனம் செலுத்த வேண்டும்” என கூறினார்.

மேலும், “இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத தலங்கள் வெறுமனே வழிபாடுகளை மாத்திரம் நடாத்தாது சமூகத்தினருக்கு நற்பண்புகளை வழங்குவதற்கு முன்னின்று செயற்பட வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “அமெரிக்க வல்லரசு நாடாகத்தான் இருக்கின்றது அங்கும் படையினர் உள்ளனர். அங்கு அதிகமாக போதைப்பொருள் காணப்படுகின்றது. அவற்றை அவர்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

அவற்றினை போல் தான் இங்கும் படையினர், பொலிஸாரை வைத்து முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்தியா மிகவும் அருகில் உள்ளதால் அங்கு விரைவாக சென்று குறிப்பிட்ட நேர காலத்திற்குள் போதைப்பொருளை பெற்று வியாபாரத்தை முன்னெடுக்கின்றார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 12 =

*