;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (26.07.2018)

0

கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைக்க நடவடிக்கை

புத்தகங்களை வாசிக்கும் கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைப்பதற்கு தேவையான வேலைத் திட்டங்களை வகுக்கும் யோசனை ஒன்று ஜனாதிபதியிடம் முன் வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

கொழும்பு, வெலிக்கட சிறைச்சாலையில் இன்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

புத்தகங்களை வாசித்தால் அவர்கள் விமர்சனம் அல்லது சுருக்க ஆய்வு செய்து சமர்பிக்க வேண்டும் என்பதுடன், அது ஒரு மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு தண்டனைக் காலத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க யோசனை முன்வைப்பதாக அமைச்சர் கூறினார்.

தற்போதைய சமுதாயத்துடன் மாற்றமடையும் புதிய எண்ணங்கள் ஊடாக தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையின் உளவுத்துறையை கலைக்க உத்தரவு

வெலிக்கடை சிறைச்சாலையின் உளவுத்துறையை உடன் அமுலுக்கு வரும் வகையில் கலைக்க நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல உத்தரவிட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவிக்கின்றது.

கொழும்பின் சில பகுதிகளுக்கு மின்சாரத் தடை

நாளை (27) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கொழும்பின் சில பகுதிகளுக்கு மின்சாரத் தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

132 கிகா வெட் மின் கட்டமைப்பில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இந்த மின்சாரத் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரத் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது​.

கோட்டை ரயில் நிலையத்தில் அமைதியின்மை

கோட்டை ரயில் நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில்வே தொழிற்சங்கங்கள் திடீரென ஆரம்பித்த இரண்டு மணித்தியால பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இன்று பிற்பகல் 2 மணிமுதல் 4 மணிவரை இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. எனினும் புறக்கணிப்பு நிறைவடைந்தும் ரயில் சேவை வழமைக்குத் திரும்பாததால் பயணிகளுக்கும், ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.ஷ

காணிப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்ததாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

’ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கவேண்டும்’

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி​ மைத்திரிபால சிறிசேனவால் பதவிவிலக்க முடியுமென, அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட அணி தெரிவித்துள்ளது.

சிங்கள மொழியிலுள்ள அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில், பிரதமரைப் பதவி விலக்குவதற்கான அதிகாரம், ஜனாதிபதியிடம் காணப்படுவதாகவும் அந்த அணி சுட்டிக்காட்டியது.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை பயன்படுத்தி, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கவேண்டுமென, அவ்வணி வலியுறுத்துகின்றது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர், டிலான் பெரேராவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + 10 =

*