;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபருக்கு நினைவஞ்சலி..!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர் சரவணமுத்து பொன்னம்பலம் அவர்கள் அவுஸ்ரேலியாவில் அமரத்துவம் அடைந்தமையையிட்டு கல்லூரி அதிபர் தலைமையில் ஆசிரியர், மாணவர்களால் நினைவஞ்சலி நிகழ்வு 25.07.2018 புதன்கிழமை கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மாணவர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கல்லூரியின் பழைய மாணவர் பேரவையின் உபதலைவரும் வாழ்நாள் பேராசிரியருமான திரு.பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் நினைவுப் பேருரை நிகழ்த்தினார் தொடர்ந்து பழைய மாணவர் சங்க செயலாளர் வைத்திய கலாநிதி ஆ.ஜெயக்குமார் அவர்கள் நினைவுரையாற்றினார். மாணவர்களின் மௌன அஞ்சலியுடன் நிறைவு பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*