;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை – பாதுகாப்பு படை அதிரடி..!!

0

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

அவர்களின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்து பயங்கரவாதிகள் மீது சரமாரி எதிர் தாக்குதல் நடத்தியதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 1 =

*