;
Athirady Tamil News

வற்றாப்பளை அம்மன் ஆலய வழிபாட்டில் விவசாய அமைச்சர்..!!

0

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்றைய தினம் மாவட்ட கமநல சேவை நிலையத்திற்கு விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இவ்விஜயத்தின் பிரதான நோக்கமாக கமநல உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகளுடனான தற்போது நிலவும் நிலைமைகளை அவதானிப்பதோடு,தற்போது நிலவும் வறட்சி நிலைமையின் தாக்கங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

ஊடுபயிர்செய்கை காலத்தின் பொழுது பருவ செய்கைகளான கச்சான்.தென்னை.உளுந்து போன்றவற்றை பயிருடுவதனால் வறட்சி காலங்களில் பாதிப்பை எதிர்நோக்குவதாகவும் இதனால் பொது கிணறுகள் அமைத்து தரப்படவேண்டுமேனவும் சிக்கனமாக நீரினை விவசாய நடவடிக்கைகளுக்காக பயன் படுத்த நவீன தூவல் நீர்ப்பாசன முறையில் விவசாயத்தை மேற்கொள்ள விவசாய பிரதி அமைச்சரின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதாகவும் கூறினார்

காலநிலை மாற்றத்தின் போது எதிர்வரும் காலங்களில் எவ்வாறு பயிர்செய்கைகளை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்த விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் ஆலய பிரார்த்தனையிலும் ஈடுபட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × five =

*