;
Athirady Tamil News

வவுனியாவில் தமிழ் தேசிய வீரர் தினத்தை முன்னிட்டு இரத்ததானம் மற்றும் கண்தானம் செய்யப்பட்டது..!!

0

வவுனியாவில் தமிழ் தேசிய வீரர்கள் தினத்தை முன்னிட்டு இரத்ததானம் மற்றும் கண்தானம் செய்யும் நிகழ்வு இன்று (27) வவுனியா பொது வைத்தியசாலையில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உதவி மாவட்ட அமைப்பாளர் அ. நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இரத்தான நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

1983 ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, போராளிகள் மற்றும் பொதுமக்களின் 35 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு நடத்தப்பட்ட குறித்த இரத்த தான நிகழ்வானது தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இருபதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் குறித்த இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்டதுடன் இளைஞர்கள் தமது கண்களையும் தானம் வழங்கி பதிவு செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதிதலைவருமான செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூறன், இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் புருஸ், மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*