;
Athirady Tamil News

யாழில் மனைவி, மாமியாரை கடுமையாகத் தாக்கிய நபர்..!!

0

தாய் வீட்டில் தஞ்சமடைந்திருந்த மனைவியை அவரது கணவன் கண்மூடித்தனமாகத் தாக்கினார். அவரைத் தடுக்கச் சென்ற பெண்ணின் தாயாரையும் தாக்கிக் காயப்படுத்தினார்.

காயமடைந்த இரு பெண்களும் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மகள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் வரணிப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

மதுபோதையில் வரும் கணவன் தினமும் தன்னைத் தாக்குவதாகக கூறி தனது மகள் தனது வீட்டுக்கு வந்திருந்ததாகவும், நேற்று பகல் வீட்டுக்கு வந்த மருமகன் சமையலில் ஈடுபட்டிருந்த மகளைத் தாக்கியதாகவும், அதனைத் தடுக்கச் சென்றவேளையில் தன்னையும் தாக்கியதாக தலையில் காயமடைந்த மூதாட்டி தெரிவித்தார்.

கொடிகாமம் பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + two =

*