;
Athirady Tamil News

“தொந்தியைக் குறைப்போம்“- மந்திகையில் சைக்கிளோட்டம்..!! (படங்கள்)

0

“தொந்தியைக் குறைப்போம்“ என்னும் செயற்றிட்டத்தின் கீழ் மந்திகை ஆதார மருத்துவமனையின் ஏற்பாட்டில் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் சைக்கிளோட்டப் போட்டிகள் இன்று காலை இடம்பெற்றது.

உடற்பயிற்சியின்மையால் பல்வேறு நோய்களுக்கு இலக்காகும் நிலையைத் தடுப்பதற்காக வடமராட்சி பிரதேச வங்கிகள் மற்றும் வர்த்தக நிலையங்களின் அனுசரணையுடன் ஆண், பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டிகள் நடாத்தப்பட்டன.

சுமார் 10km தூரம் இடம்பெற்ற போட்டியில் பெண்கள் பிரிவில் வைத்தியசாலை ஊழியர் ராகினிதேவி அவர்களும், ஆண்கள் பிரிவில் ஊழியர் அனிஸ்டன் அவர்களும் முதலிடத்தினைப் பெற்றனர்.

மருத்துவமனைப் பொறுப்பதிகாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பருத்தித்துறை கோட்டக் கல்வி அலுவலர், பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி, யாழ்.பிராந்திய தொற்றா நோய் மருத்துவ அதிகாரி, பருத்தித்துறை நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 9 =

*