;
Athirady Tamil News

அறிவுஜீவிகளை சுட்டுத் தள்ள வேண்டும் – கர்நாடக பா.ஜ.க. எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு..!!

0

கர்நாடக மாநிலம் விஜயபுரா நகரில் நேற்று கார்கில் வெற்றி தின விழா நடைபெற்றது. விழாவில் பா.ஜ.க. எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் கலந்துகொண்டு பேசும்போது, ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றினார். அதேசமயம் நாட்டைப்பற்றி தவறாகப் பேசுவோரை கடுமையாகச் சாடினார்.

‘அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படும் சிலர் நாட்டைப்பற்றி தவறாக பேசுகின்றனர். இந்த அறிவுஜீவிகளால் நாடு அழிக்கப்படுகிறது. நான் மட்டும் நாட்டின் உள்துறை மந்திரியாக இருந்தால், நாட்டைப்பற்றி மோசமாக பேசும் அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படும் நபர்களை சுட்டுத்தள்ள உத்தரவிட்டிருப்பேன். பாகிஸ்தானை விட அவர்கள் ஆபத்தானவர்கள்.

இந்த அறிவுஜீவிகள் நமது நாட்டின் வசதிகளை அனுபவித்து, நமது காற்றை சுவாசித்து, தண்ணீரை அருந்துகிறார்கள். ஆனால், நமது நாட்டிற்கு எதிராக கோஷமிடுகிறார்கள்’ என்று அவர் பேசினார்.

பா.ஜ.க. எம்எல்ஏவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சு வன்முறை மற்றும் சமூகத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாகவும், பா.ஜ.க.வின் மனநிலையை காட்டுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + 11 =

*