;
Athirady Tamil News

உத்தவ் தாக்கரேவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ராகுல் காந்தி..!!

0

மத்திய அரசுக்கு எதிராக சமீபத்தில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துவரும் சிவசேனா நடுநிலை வகித்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் சிவசேனா எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை.

எனவே, சிவசேனாவின் இந்த முடிவு மோடி அரசுக்கு சாதகமானதா?, பாதகமானதா? என்று இனம்காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைப்பாட்டை சில கட்சிகள் தங்களுக்கு சாதகப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யலாம் என அரசியில் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் காணும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழக்கத்துக்கு மாறாக தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவசேனா மேலிட தலைவர் சஞ்சய் ராவட், ‘உத்தவ் தாக்கரேவுக்கு உலகம் முழுவதும் இருந்து பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தமுறை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படையாக அவரை வாழ்த்தியுள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்து காங்கிரஸ் வட்டாரங்கள், ‘அரசியல் பகைமையை கடந்து தனிப்பட்ட உறவுகளை மேம்படுத்துவதற்காக ராகுல் எடுத்துவரும் முயற்சிதான் இது’ என தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 10 =

*