;
Athirady Tamil News

வீணான உணவுகளை திருமணத்தில் பறிமாறிய மணமக்கள்: விருந்தினர்கள் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? ..!!

0

பிரித்தானியாவில் உணவுகளை வீணாக்கக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மணமக்கள் செய்த விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.லீட்ஸ் நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவருக்கும் சீர்ரீ என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருமண நிகழ்வில் எதாவது செய்யவேண்டும் என தம்பதிகள் நினைத்தார்கள்.

அதன்படி உணவை வீணாக்கும் விடயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்து The Real Junk Food Project என்ற உணவுகளை வீணாக்குவதை குறைப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிறுவனத்தை ஜேம்ஸும், சீர்ரீயும் தொடர்பு கொண்டார்கள்

இதையடுத்து குறித்த நிறுவனம் பல்வேறு சூப்பர் மார்க்கெட்களில் வேண்டாமென்று தூக்கி போட்ட உணவுகளை குறைந்த விலைக்கு வாங்கியது.

எல்லா பொருட்களும் சாப்பிடுவதற்கு தகுதியாக இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டே வாங்கப்பட்டது.அதையெல்லாம் வைத்து பல விதமான உணவுகள் திருமண நிகழ்வில் சமைக்கப்பட்டன.

இதை திருமணத்துக்கு வந்த 140 உறவினர்கள் மகிழ்ச்சியாக ருசித்து சாப்பிட்டார்கள்.
உணவுகள் அனைத்தும் மிக நன்றாக இருப்பதாகவும் கூறினார்கள்

இப்படி சமைத்ததால் உணவு செலவு மிகவும் குறைவாகவே ஆனது. அதாவது சாப்பிட்ட ஒருவருக்கு £5 மட்டுமே செலவானது.

இது குறித்து பேசிய ஜேம்ஸ் மற்றும் சீர்ரி, பொதுமக்களுக்கு உணவுகளை வீணாக்கக்கூடாது என்பதை கூற நினைத்து இதை வெற்றிகரமாக செய்தது பெருமையாக உள்ளது என கூறியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − twelve =

*