;
Athirady Tamil News

ஆண்டிற்கு 250 சுவிஸ் குடிமக்கள் வெளிநாடுகளில் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்: வெளியுறவுத்துறை..!!

0

ஆண்டிற்கு 250 சுவிஸ் குடிமக்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதாக சுவிஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது 204 சுவிஸ் குடிமக்கள் வெளிநாட்டுச் சிறைகளில் வாழ்கிறார்கள்.அவர்களில் 22பேர் பிரான்சிலும், 20பேர் ஜேர்மனியிலும் 17பேர் ஸ்பெயினிலும் 12 பேர் தாய்லாந்திலும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இன்னும் பத்துபேர் இத்தாலியிலும் பத்துபேர் அமெரிக்க ஐக்கிய நாட்டுச் சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

Le Matin Dimanche மற்றும் SonntagsZeitung உட்பட பல சுவிஸ் பத்திரிகைகள் நேற்று இந்த செய்தியை வெளியிட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள்.

சிலர் ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்தவர்கள், அல்லது கடைகளை உடைத்து திருடியவர்கள், மற்றும் சிலர் விசா தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள். இப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து தூதரக உதவிகளை நாடி வருகிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளாக இவ்வாறு உதவி நாடி வருபவர்களின் எண்ணிக்கை 80% அதிகரித்துள்ளதாக ஃபெடரல் வெளியுறவு விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை வெளி நாடுகளுக்கு பயணப்படும் மற்றும் வெளி நாடுகளில் வாழும் சுவிஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் காட்டுகிறது எனலாம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − two =

*