;
Athirady Tamil News

டயானா இறக்கும் முன்னர் இளவரசர் வில்லியம் அளித்த வாக்குறுதி: நிறைவேறாமலேயே போன சோகம்..!!

0

பிரித்தானிய இளவரசி டயானா இறப்பதற்கு முன்னர் அவர் மகன் இளவரசர் வில்லியன்ஸ் தாயிடம் அளித்த வாக்குறுதி இறுதிவரை நிறைவேறாமல் போனது தெரியவந்துள்ளது.

சார்லஸ் – டயானா ஜோடி கடந்த 1981-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் 1996-ல் விவாகரத்து பெற்றார்கள்.

இளவரசர் சார்லஸுடன் இணைந்து வாழ்ந்ததால் இளவரசி டயானாவுக்கு Her Royal Highness என்ற பட்டம் கொடுக்கப்பட்டிருந்தது.

அப்பட்டத்தை டயானா மிகவும் விரும்பிய நிலையில் அவருடன் மனஸ்தாபம் ஏற்பட்டதால் டயானாவுக்கு அப்பட்டம் நிலைப்பதை சார்லஸ் விரும்பவில்லை

இருவரும் பிரிந்த பின்னர் Her Royal Highness பட்டம் டயானவை விட்டு போனது.டயானாவுக்கு விவாகரத்து ஆன போது அவர் மூத்த மகன் வில்லியம் டீன் ஏஜ் பருவத்தில் இருந்தார்.

டயானாவுக்கு பிடித்த பட்டம் அவரை விட்டு போனதால் மன கஷ்டத்தில் அவர் இருப்பதை உணர்ந்த வில்லியம் தாயிடம் ஒரு வாக்குறுதி அளித்தார்.

அதாவது, கவலைப்படாதீர்கள் அம்மா, நான் ஒருநாள் ராஜா ஆனவுடன் உங்கள் பட்டத்தை திரும்ப கிடைக்க செய்வேன் என வாக்குறுதி அளித்தார்.

ஆனால் துரதிஷ்டவசமாக இது நடந்த அடுத்த ஆண்டே (1997) டயானா கார் விபத்தில் உயிரிழந்தார்.இதனால் இளவரசர் வில்லியமின் வாக்குறுதி நிறைவேறாமலேயே போனது.

டயானாவின் நெருங்கிய நண்பரான பவுல் புரில் எழுதியுள்ள A Royal Duty என்ற புத்தகத்தின் மூலமே இந்த விடயம் தற்போது தெரியவந்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 15 =

*