;
Athirady Tamil News

பிரித்தானியாவில் பிஞ்சு குழந்தைகளின் கல்லறைகளை தோண்டி சேதப்படுத்திய கும்பல்: அதிர்ச்சி காரணம்..!!

0

பிரித்தானியாவில் பிஷப் ஆக்லாந்து கல்லறைத் தோட்டத்தில் மர்ம கும்பல் ஒன்று பிஞ்சு குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கல்லறைகளை தோண்டி சேதப்படுத்தியுள்ள சம்பவம் பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிரித்தானியாவின் டர்ஹாம் மாவட்டத்தில் உள்ள பிஷப் ஆக்லாந்து கல்லறைத் தோட்டத்தில் அமைந்துள்ள சுமார் 50 கல்லறைகளை மர்ம கும்பல் சேதப்படுத்தியுள்ளது.

குறித்த கல்லறைகளில் குழந்தைகளின் நினைவாக அவர்களின் விருப்ப பொருட்களையும் சேர்த்து அடக்கம் செய்வது வழக்கம்

இந்த பொருட்களை நோட்டமிட்டே குறித்த கும்பல் தற்போது கல்லறைகளை தோண்டி சேதப்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக கடந்த வாரம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் சுமார் 25 கல்லறைகளை சேதப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்தும் குழந்தைகளின் கல்லறையாகும்

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரின் கல்லறைகளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பிரசுரித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு புதைக்கப்பட்ட சிறுவன் ஒருவரது கல்லறையை இதே போன்று பலமுறை தாக்கப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறை சேதப்படுத்தப்பட்ட பின்னரும் தமது மகனுக்கு பிடித்தமான பொருட்களை கல்லறையில் வைத்து மீண்டும் புதுப்பித்துள்ளார்

சிலர் இதுபோன்ற சம்பவங்களை கண்காணிக்க கமெராக்களை பொருத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் டர்ஹாம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × two =

*