;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாகுபவர்களில் பத்தில் ஒருவர் ஆண்: அதிர்ச்சி ஆய்வு..!!

0

அலுவலகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகுபவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக இணையத்தில் தளம் ஒன்றை தொடங்கிய சூரிச்சிலுள்ள பாலின சமத்துவ அலுவலகம் உதவி கோருபவர்களில் 10 சதவிகிதத்தினர் ஆண்களாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளது.

பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாகுவதற்கு ஆண் பெண் வேறுபாடு இல்லை என்றும் அது அவர்களுக்கு மேல் உள்ள அதிகார வர்க்கம் தொடர்பான விடயமும் கூட என பாலின சமத்துவ அலுவலக ஊழியர்களில் ஒருவரான Anja Derungs தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட விடயம் தொடர்பாக ஆலோசனைகள் வழங்குவதற்காக வேறு சில நிறுவனங்களுடன் இணைந்து இந்த அமைப்பு ஓராண்டிற்கு முன் நிறுவப்பட்டது.

இதுவரை வாரம் ஒன்றிற்கு சராசரியாக இரண்டு பேருக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக இந்த அமைப்பு ஆலோசனைகள் வழங்கியுள்ளது.

அவர்களில் பத்தில் ஒருவர் ஆண் என Anja Derungs தெரிவித்தார். ஆண்களைப் பொருத்தவரையில் பாலியல் துன்புறுத்தல் என்பது அருவருப்பாக கருதப்படுவதாகவும் யாரும் அதற்கு இலக்காக விரும்புவதில்லை என்றும் அவர் கூறினார்.

ஆனாலும் ஆண்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது உண்மைதான் என்று கூறியுள்ள Anja Derungs, அவர்கள் தங்கள் பாலின அடிப்படையில் அல்லது அவர்களது அலுவலகத்தில் காணப்படும் மோசமான சூழல் காரணமாக பாதிக்கப்படலாம்.

பெண்களைப் போலவே ஆண்களும் பாதிக்கப்பட்டதை தங்கள் இணைய தளம் வாயிலாக தெரிந்து கொண்டதாகக் கூறும் Anja Derungs, ஆபாச ஜோக்குகளும் விரும்பத்தகாத தொடுதல்களும் பெண்களைப் போலவே ஆண்களையும் பாதிப்பதாகக் கூறுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + fifteen =

*