;
Athirady Tamil News

450 அகதிகளை வெளியேற்றிய பிரான்ஸ் பொலிசார்: எங்கு போவது என தெரியாமல் அலையும் அகதிகள்..!!

0

பிரான்சின் Nantes நகரில் பூங்கா ஒன்றில் ஒரு மாதத்திற்கும் மேலாக முகாமிட்டிருந்த 450 சூடான் மற்றும் எரித்ரிய அகதிகளை பிரான்ஸ் பொலிசார் நேற்று அங்கிருந்து அகற்றினர்.

அந்த முகாமில் சுகாதாரம் சரியில்லை என்றும், எலிகள் நடமாட்டம் இருப்பதாகவும் சிலருக்கு சிரங்கு வந்திருப்பதாகவும் கூறியுள்ள அதிகாரிகள் சுமார் 450பேரை வெளியேற்றியுள்ளனர்.

சுமார் 300,000பேர் வாழும் Brittanyயில் உள்ள ஆற்றோர நகரமான Nantesஇல் ஒரே ஆண்டில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த முகாமில் இருந்து அகற்றப்பட்ட அகதிகள் ஒரு பொது மண்டபத்திற்கு அனுப்பப்பட்டு அதிகாரிகள் அவர்களை விசாரித்தனர்.

மிகவும் மோசமான நிலையிலுள்ளவர்களுக்கும் முடிந்த அளவு புகலிடம் கோருவோருக்கும் மட்டுமே தங்குமிட வசதி செய்து தர இருப்பதாகத் தெரிவித்த உள்ளூர் அதிகாரிகள், ஆனால் ஏற்கனவே தங்குமிடங்கள் நிரம்பி வழிவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பகுதியில் கடந்த வாரத்தில் 100 பேருக்கு மட்டுமே அவசர கால தங்குமிடங்களில் தங்குவதற்கு இடமிருப்பதை கண்டறிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இதன் பொருள் என்னவென்றால் இன்றிரவு 300 பேர் கூடாரம் எதுவுமின்றி தெருக்களில்தான் உறங்கப்போகிறார்கள் என்பதுதான் என்கிறார் Francois Prochasson, அவர் அகதிகளுக்கு உதவும் உள்ளூர் குழு ஒன்றைச் சேர்ந்தவர்.அவர்கள் இன்னொரு இடத்திற்கு போகப்போகிறார்கள், இன்னொரு பூங்காவிற்காக இருக்கலாம், எதுவும் நடக்கப் போவதில்லை என்கிறார் அவர்.

இதற்கிடையில் புகலிடம் கோர முடியாதவர்கள், சட்டப்படி வாழும் உரிமம் கோர இயலாதவர்கள் அல்லது ஏற்கனவே இன்னொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டில் புகலிடம் கோரியவர்கள் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்கிறார் உள்ளூர் அதிகாரி ஒருவர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*