;
Athirady Tamil News

குர்திஷ் படைகள் பிடியில் குடிமக்கள், மீட்க முடியாமல் தவிக்கும் சுவிட்சர்லாந்து..!!

0

தீவிரவாத குழுக்களை ஆதரிப்போர் என்று குற்றம் சாட்டப்பட்டு சிரியாவில் குர்திஷ் படைகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள நான்கு சுவிஸ் குடிமக்களை மீட்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

சுவிஸ் அட்டார்னி ஜெனரல் அலுவலகம் நான்கு சுவிஸ் குடிமக்கள்மீது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேருவதற்காக சிரியாவுக்கு சென்றதாக குற்றம் சாட்டியுள்ளது.

இவர்களில் ஜனவரி 2018இலிருந்து குர்திஷ் படைகளின் பிடியிலிருக்கும் செலினா என்ற புனைபெயரால் அழைக்கப்படும் ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களை சுவிஸ் நீதி அமைப்பின்முன் எப்படி கொண்டு வருவது என்ற விடயத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் இருக்கும் மிகப்பெரும் குழப்பம் என்னவென்றால், சுவிட்சர்லாந்து குர்திஸ்தானை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான்.

இப்படியிருக்கும் நிலையில் குர்திஷ் அரசாங்கத்துடன் நடத்தப்படும் எந்த பேச்சு வார்த்தையும் சுவிட்சர்லாந்து குர்திஸ்தானை ஒரு நாடாக அங்கீகரித்து விட்டதாக கருதப்படும்.

இதற்கிடையில் குர்திஷ் அதிகாரிகள் அந்நிய நாட்டு ஐ.எஸ் போராளிகளை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதில் முனைப்பாக உள்ளனர்.

இதனால் குர்திஷ் அரசாங்கத்துடன் திரை மறைவில் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர சுவிட்சர்லாந்துக்கு வேறு வழியில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*