;
Athirady Tamil News

பிரித்தானிய ராணியின் பாதுகாவலர் செய்த செயல்: வைரலாகும் வீடியோ..!!

0

பிரித்தானிய ராணியின் அணிவகுப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர், அணிவகுப்பின்போது பாதையில் நின்று கொண்டிருந்த பெண்ணை தள்ளி விடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரித்தானிய அரசு குடும்பத்தில் உத்தியோகபூர்வ பாதுகாவலர்கள் சிகப்பு நிற உடை மற்றும் கருப்பு நிற கரடி தொப்பியினை அணிந்து கொண்டு அணிவகுப்பினை மேற்கொள்ளவர்.

இவர்களது அணிவகுப்பினை பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் அரண்மனை கோட்டையை சுற்றிலும் குவிவதால், அப்பகுதியே திருவிழா கோலம்பூண்டு காணப்படும்

காவலாளிகள் எப்பொழுதும் அமைதியாக, சுறுசுறுப்பாக இருந்தாலும், சுற்றுலா பயணிகளிடம் இருந்து சிறிது இடைவெளி வைத்துக் கொள்ளுமாறே அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஒருவேளை இறுதி எச்சரிக்கையையும் மீறி சுற்றுலா பயணிகள் நெருங்கி வந்தால், துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிகப்பு நிற உடை அணிந்த காவலாளி ஒருவர் தனது அணி வகுப்பை செய்து கொண்டிருக்கும்போது, சுற்றுலா பயணியை சேர்ந்த பெண் ஒருவர் கயிற்றை தாண்டிக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

தனது வழியில் நின்று கொண்டிருந்ததால், எந்த எச்சரிக்கையும் விடாமல் பின் பக்கத்திலிருந்து தள்ளி விட்டபடியே அந்த காவலர் தனது பணியை தொடர்ந்து செய்தார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 2 =

*