;
Athirady Tamil News

முதலாம் உலகப்போர் ஆரம்பமான நாள்: 28-7-1914..!!

0

ஆஸ்திரியா இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும் காரில் சென்றபோது செர்பியா நாட்டைச் சேர்ந்த காவ்ரீலோ பரின்சிப் என்பவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது 1914-ம் ஆண்டு ஜுன் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது.

இதன் காரணமாகப் பழிவாங்கும் நோக்குடன், செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. பின்னர் இதில் பல நாடுகள் இணைந்து உலகப்போராக மாறியது.

இதே தேதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:-

* 1914 – முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. செர்பியா மீது ஆஸ்திரியா- ஹங்கேரி போர் தொடுத்தன.

* 1915 – ஐக்கிய அமெரிக்காவின் ஹெயிட்டி முற்றுகை ஆரம்பமானது.

* 1943 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகர் மீது பிரிட்டன் குண்டுத் தாக்குதல் நடத்தியதில் 42 ஆயிரம் ஜெர்மனியர்கள் கொல்லப்பட்டனர்.

* 1945 – அமெரிக்க போர் விமானம் ஒன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 79-ம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

* 1957 – ஜப்பானின் இசகாயா என்ற இடத்தில் மழை, மற்றும் மண்சரிவு காரணமாக 992 பேர் பலியானார்கள்.

* 1965 – வியட்நாம் போர்: தெற்கு வியட்நாமில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை 75 ஆயிரத்திலிருந்து 1 லட்சத்து 25 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சன் அறிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + one =

*