;
Athirady Tamil News

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 43 ஆயிரம் பேர் பலியான நாள்: 28-7-1976..!!

0

சீனாவின் ஹெபெய்-ல் உள்ள டங்ஷான் அருகே 1976-ம் ஆண்டு ஜுலை மாதல் 28-ந்தேதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது.

இதைத்தொடர்ந்து 7.1 ரிக்டர் அளவில் 16 மணி நேரம் கழித்து கடுமையான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 769 பேர் பலியானார்கள். 20-ம் நூற்றாண்டில் ஏற்பட்டு நிலநடுகத்தில் கொடுமையானது இதுவாகும்.

இதே தேதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:-

* 1996 – வாஷிங்டனில் கென்னவிக் என்ற இடத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

* 2005 – ஐரியக் குடியரசு ராணுவம் தனது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுகுக் கொண்டு வருவதாக அறிவித்தது.

* 2005 – இங்கிலாந்து, பேர்மிங்காம் நகரைச் சூறாவளி தாக்கியதில் 40 லட்சம் டாலர் மதிப்பிலான சொத்துகக்ள் சேதமடைந்தன. 39 பேர் காயமடைந்தனர்.

* 2006 – வாகரையில் இலங்கைப் போர் விமானங்கள் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*