;
Athirady Tamil News

ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை..!!

0

வவுனியா வர்த்தக நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறைகளை வழங்க வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாக சபைக் கூட்டத்தில் அனைத்து வர்த்தகர்களின் ஒத்துழைப்புடன் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மாதகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த வர்த்தகர்களின் ஆய்வறிக்கையில் எதிர்வரும் ஆகட்ஸ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சகல வர்த்தகர்களும் குடும்பத்தினருடன் இணைந்து விடுமுறையினை கழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கமைய இன்று இடம்பெற்ற முதலாவது நிர்வாக சபைக் கூட்டத்தில் வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், தனியார் போக்குவரத்துச் சங்கம், சிகை உரிமையாளர்கள் சங்கம், உள்ளூர் விளை பொருள் உற்பத்தியாளர்கள் சங்கம், மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயற்படுவதாகவும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*