;
Athirady Tamil News

பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது – 30 பேர் உயிரிழப்பு..!!

0

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் இன்று காலை, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஒரு பேருந்து மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. அம்பெனலி காட் மலைப்பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென பள்ளத்தாக்கில் தலைகீழாக விழுந்தது.

சுமார் 300 அடி ஆழ பள்ளத்தில் விழுந்ததால் பேருந்து முற்றிலும் சிதைந்து போனது. பேருந்தினுள் இருந்தவர்கள் உடல் உறுப்புகளை இழந்த நிலையில் உயிருக்குப் போராடினர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 15 =

*