உ.பி. கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 49-ஆக உயர்வு..!!

பருவ மழை தீவிரம் அடைந்ததால் உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சஹாரன்பூர் பகுதியில் இன்று பலத்த மழைக்கு சிலர் பலியானார்கள். கடந்த 3 தினங்களில் மட்டும் உத்தரபிரதேச மாநிலத்தில் பலத்த மழைக்கு 49 பேர் வரை பலியாகி உள்ளனர்.
சஹாரன்பூர் பகுதியில் அதிகபட்சமாக 11 பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக ஆக்ரா, மீரட் பகுதியில் தலா 6 பேரும், மெய்ன்பூரியில் 4 பேரும், கசன்கஞ்சில் 3 பேரும், பெரேய்லி, பகாபட், புலந்தா சாகிரில் தலா 2 பேரும் இடிமின்னலில் பலத்த மழைக்கு பலியாகி உள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. அங்கு பேரிடர் மீட்பு குழு விரைந்து உள்ளது. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் உ.பி.யில் இன்று முஷாபர்நகரில் நில அதிர்வு ஏற்பட்டது.