;
Athirady Tamil News

ஏ9 வீதி கொக்காவில் பகுதியில் வீதிக்கு வந்த யானை: பயணிகள் அசௌகரியம்.!!! (படங்கள்)

0

ஏ9 வீதி கொக்காவில் பகுதியில் யானை ஒன்று வீதிக்கு வந்தமையால் அவ்வீதியில் பயணித்தவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இன்று மாலை 5.30 மணியளவில் வீதிக்கு வந்த யானை சுமார் 15 நிமிடங்கள் அப்பகுதியில் நடமாடிவிட்டு பின்னர் காட்டுக்குள் சென்றது.

தந்தங்களையுடைய யானை தனித்து வீதிக்கு வந்தமையால் அச்சமடைந்த பயணிகள் தமது வாகனங்களை திருப்பி வந்த திசை நோக்கிச் சென்றனர். சிலர் தூர விலகி நின்றனர்.

யானை தானாக அவ்விடத்தில் இருந்து நகர்ந்து காட்டுக்குள் சென்ற பின்னர் பயணிகள் தமது பயணத்தை தொடர்ந்தனர். அண்மைக்காலமாக கொக்காவில் பகுதியில் அடிக்கடி யானனை வீதிக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + eighteen =

*