;
Athirady Tamil News

கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு விமான செலவு ரூ.387 கோடி..!!

0

2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்றார்.

மோடி பிரதமராக பொறுப்பு ஏற்ற பிறகு வெளிநாடுகளுக்குத்தான் அடிக்கடி செல்கிறார் என்ற விமர்சனம் எழுந்தது. இந்தியாவில் இருப்பதை விட அவர் விமானத்தில் தான் அதிகமாக பயணம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு கூறப்படுவது உண்டு.

இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கான விமான செலவு ரூ.387.26 கோடி என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முதல் 4 ஆண்டுகளில் அவர் 36 முறை வெளி நாடுகளுக்கு தனி விமானத்தில் சென்றுள்ளார். இதில் ஏர் இந்தியா விமானம் மூலம் 31 தடவையும், இந்திய விமானப்படை விமானம் மூலம் 5 முறையும் சென்றுள்ளார். இதற்காக ஏர் இந்தியாவுக்கு ரூ.387.26 கோடி செலவாகி உள்ளது.

மன்மோகன்சிங் 2-வது முறையாக பிரதமராக இருந்த போது ஏற்பட்ட வெளிநாட்டு விமான செலவை விட இது ரூ.91 லட்சம் கூடுதலாகும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2-வது ஆட்சியின் போது அவர் முதல் 4 ஆண்டுகளில் 31 முறை வெளிநாடு சென்றுள்ளார். இதற்காக ஏர் இந்தியாவுக்கு ரூ.386.35 கோடி செலவானது. ஆனால் முதலாவதாக மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது ரூ.292 கோடி மட்டுமே (5 ஆண்டில் 34 வெளிநாட்டு பயணம்) விமான செலவானது.

மோடி முதல் 4 ஆண்டுகளில் 155 நாட்கள் வெளி நாட்டில் இருந்திருக்கிறார். இன்றைய தேதிவரை கணக்கிட்டால் 43 முறை வெளிநாடு சென்றுள்ளார். 182 நாட்கள் வெளிநாடுகளில் தங்கியுள்ளார்.

மன்மோகன்சிங் 2-வது முறையாக பிரதமராக இருந்த போது 5 ஆண்டுகளில் 38 முறை வெளிநாடு சென்றுள்ளார். மொத்தம் 162 நாட்கள் வெளிநாடுகளில் தங்கி இருந்தார். முதல் 4 ஆண்டுகளில் 131 தினங்கள் இருந்தார்.

பிரதமர் வெளிநாட்டு பயணத்துக்கு மொத்தம் ரூ.1484 கோடி செலவாகி உள்ளது என்று பாராளுமன்றத்தில் சமீபத்திய மத்திய வெளியுறவு துறை மந்திரி டி.கே.சிங் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 1 =

*