;
Athirady Tamil News

வடக்கில் கைத்தெறி மற்றும் கைவினைப் பொருள்கள் உற்பத்தியாளர்களின் கைத்தொழில் கண்காட்சி..!! (படங்கள்)

0

வடக்கில் கைத்தெறி மற்றும் கைவினைப் பொருள்கள் உற்பத்தியாளர்களின் கைத்தொழில் கண்காட்சி யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்தியத் தூதுவர் மற்றும் வடக்குமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோரால் உத்தியோகபூர்வமாக நாடா வெட்டி கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.

கண்காட்சியில் வடமாகாண கைப்பணியாளர்கள் மற்றும் நெசவாளர்களினால் உருவாக்கப்பட்ட ஆக்கங்களான கைத்தெறி நெசவு உற்பத்திகள், களிமண் உற்பத்திகள்,தும்பு ஓலை புல் சார்ந்த உற்பத்திகள், பிரம்பு முங்கில் குழாய் சார்ந்த உற்பத்திகள் , உலோகக் கைப்பணிப்பொருள்கள், ஆபரணங்கள்,சங்கீத உபகரணங்கள்,துணிகளிலான கைப்பணிப்பொருள்கள்,சிரட்டையிலான கைப்பணிப்பொருள்கள் , சிப்பியிலான கைப்பணிப்பொருள்கள், மர உற்பத்திபொருள்கள், தோற்பொருள்கள்,கல்லாலான கைப்பணிப்பொருள்கள்,பாரம்பரிய கலை வரைபுகளும் சிற்பங்களும், தென்னை பனை கித்துள் சார்ந்த உற்பத்திகள்,நானாவித கைப்பணிப்பொருள்கள்,நினைவுச்சின்னங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டதுடன் மொத்தமாக எண்பதுக்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்ட்டுள்ளன.

கண்காட்சிக்கு முன்னராக நடத்தப்பட கைவினை பொருள்களுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் விருதுகளும் விருந்தினர்களால் வழங்கப்பட்டது. கண்காட்சி நாளையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − eleven =

*