;
Athirady Tamil News

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் தற்கொலை..!!

0

மார்த்தாண்டம் பெரும் பரத்திவிளை பகுதியை சேர்ந்தவர் செல்லசாமி. இவரது மகன் செல்வின் ஜெபராஜ் (வயது 22). இவர் பி.இ. ஏரோநாட்டிக் கல் படித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஆஸ்பத்திரி சென்று சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

இதனால் மனவருத்தத்துடன் காணப்பட்டு வந்த செல்வின்ஜெபராஜ் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் ரவீந்திரன், சப்-இன்ஸ் பெக்டர் சுந்தரலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்தாமரைகுளம் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுலிங்கம் (45). இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வருத்தத்துடன் காணப்பட்டுவந்த அவர் சம்பவத்தன்று விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதுகுறித்து தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரணியல், காரங்காடு பகுதியை சேர்ந்தவர் மத்தியாஸ் (44) தொழிலாளி. இவர் கடந்த சில மாதங் களுக்கு முன்பு மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த அவர் சம்பவத்தன்று மனைவி வெளியே சென்ற போது வீட்டில் மத்தியாஸ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுதேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நாகர்கோவில் மணிக்கட்டி பொட்டல் முகிலன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் எடில்ராஜ்வினோ (23). இவர் வேளாண்மை துறையில் பி.எஸ்.சி. படித்து உள்ளார். அவருக்கு நாகை மாவட்டம் மயிலாடுதுறை வேளாண் துறையில் வேலை கிடைத்தது. வருகிற 31-ந்தேதி வேலையில் சேர்வதற்கான கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் நாகர் கோவில் சுங்கான்கடை பகுதியில் உள்ள ஒரு சர்ச் அருகே விஷம் குடித்து பலியாகி கிடந்தார். அவரது பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் வேலைக்கு சேர விருப்பம் இல்லாததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 2 =

*