;
Athirady Tamil News

உலகத் தமிழ் நாடக விழா uk 2018..!!

யாழ்.தர்மினி பத்மநாதன் .

0

உலகத் தமிழ் நாடக விழாவில் 12 நாடுகளில் இருந்து 14 நாடகங்கள் பங்கேற்க உள்ளனர் .

பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியம் அறிவிப்பு.

பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியம் ”உடல்” சஞ்சிகையின் அனுசரணையில் பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியத்தின் தலைவர் எம் .அரியநாயகம் தலைமையில் எதிர்வரும் ஐப்பசி மாதம் 6 ஆம் , 7 ஆம் திகதிகளில் உலகத்த தமிழ் நாடக விழா லண்டனில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது 12 நாடுகளில் இருந்து 14 நாடகங்கள் பங்கேற்க உள்ளன என . பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியம் அறிவித்துள்ளதாக இலங்கைக்கான ஒழுங்கமைப்பாளர் யாழ்.தர்மினி பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

உலகத்த தமிழ் நாடக விழா குறித்து இன்று [28.07.2018 ] காலை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியம் ”உடல்” சஞ்சிகையின் அனுசரணையில் எதிர்வரும் புரட்டாதி மாதம் 6 ஆம் , 7 ஆம் திகதிகளில் உலகத்த தமிழ் நாடக விழாவினை லண்டனில் திடடமிட்டுள்ளனர். நாடக விழாவில் கடந்த 2016 ஐ விட விட இம்முறை மிக புகழ் பெற்ற பல நாடுகளிலும் அறியப்பட்ட நாடக ஆசிரியர்கள் பங்கு கொள்ள உள்ளனர்.

குறிப்பாக கடந்த முறை சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட் ட நடிகர் நாசர் இம்முறை ஆற்றுகையாளராக பங்கு கொள்ளும் ஓராள் அரங்கு மிக விசேடமாக இடம் பெற உள்ளது . யாழ்ப்பாணப் பல் கலைக்கழக முன்னாள் துறைத்தலைவர் கலாநிதி சிதம்பரநாதனின் ஆற்றுகை அவரின் குழுவினர் பங்கு கொள்கின்றனர். மட்டக்களப்பில் இருந்து விமல் ராஜ அழகய்யாவின் ஆற்றுகையும் அரங்கேற உள்ளது . இவர்கள் இலங்கையில் இருந்து இவ்விரு குழுவினரும் செல்ல உள்ளனர். செல்லவுள்ளனர்.

. தமிழ் நாட்டில் இருந்து முனைவர் பார்த்திபராஜா வின் நாடகம், . பாண்டிச்சேரி பல்கலைக் கழக நாடகத்துறை கருஞ்சுழி ஆறுமுகம் . மற்றும் கோபி ஆகியோரினதும் நாடகங்கள். . சிங்கப்பூரில் இருந்து பல்வேறு ஆளுமை கொண்ட ஆனந்தக்கண்ணனின் நாடகம் . யூ .எஸ் .ஏ யிலிருந்து நம் கலை அமைப்பின் ஊடாக கஜேந்திரகுமாரின் ஆற்றுகை லண்டனிலிருந்து சாம் பிரதீபனும் , எழுச்சி மிக்க நாடகங்களை தரும் புலவர் நல்லதம்பி சிவானந்தனின் நாடகம் , ஜெர்மனியில் இருந்து ராதா சர்மாவின் நாட்டிய நாடகம் , யேர்மனியில் இருந்து தானாச் சேர்ந்த கூட்டம் மாணவர்களின் பு திய முயற்சியாக ஒரு நாடகம் , டென்மார்க்கிலிருந்து சிவகலையின் நாடகம் , பிரான்சிலிருந்து ஜெ .எஸ் சேகரின் நாடகம் என்பன அரங்கேற உள்ளன . 12 நாடுகளில் இருந்து 14 நாடகங்கள். அரங்கேற உள்ளன.

பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியமானது கடந்த 18 வருடங்களாக பிரான்ஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட சங்கமாக பாரிய படைப்புக்களை .பாரீஸ் , ஜேர்மன் , லண்டன் ஆகிய நாடுகளிலும் பல நாடகங்களை மேடையேற்றியதுடன் . கூத்திசை குறுந்தகடுகள் என்பவற்றையும் வெளியிட்டு உள்ளனர்.

பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியமும் அரங்கை வலுப்படுத்த வேண்டும் அரங்காளர்களை கௌரவிக்க வேண்டும் அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் . ஒருங்கிணைப்பதன் மூலம் தான் , சமூக அரசியல் பொருளாதார விடுதலைக்கான களங்களை களை உருவாக்க முடியும் என்ற நோக்கத்தில் ” உடல் ”என்ற நாடக சஞ்சிகையினை கடந்த 18 ஆண்டுகளாக உருவாக்கியது டன் நாடக விழாவினையும் நடாத்தஆரம்பித்தது. . .

உடல் சஞ்சிகையானது ”ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை அதன் மரபு சார்ந்த கலை களின் வரலாற்றை நிர்ணயிக்கிறது அதுவே மனித சமூகத்தின் வரலாறும் ஆகின்றது ” என்ற விருது வாக்கியத்துடன் உலகளாவிய இரீதியில் அரங்காளர்களிடம் போய்ச் சேர்ந்துதான் காரணமாக , அரங்காளர்களிடமும் ஆற்றுகையாளர்களிடமும் ஆர்வலர்களிடம் இருந்தும் அதற்கான பாராட்டும் வந்து குவியத் தொடங்கின . அதனூடாக உலகளாவிய ரீதியில் அரங்காளர்களின் தொடர்பு வந்து சேர்ந்தன . . .உடல் சஞ்சிகை எழுத்து வடிவுடன் மட்டுமன்றி செயல் வடிவிலும் செய்வதற்கான நோக்கம் எழுந்தது.

காரணம் இன்றைய புலம் பெயர்ந்து வாழுகின்ற அரங்காளர்களை நாங்கள் ஒருங்கிணைக்க வேண்டும் . அதன் மூலம் தமிழ் நாடகக் கலைகளின் தரத்தை உலகளாவிய ரீதியில் உயர்த்தலாம் , எமது கலைகளை வேராக எமது இளம் தலை முறையினரிடம் கையளிக்க வேண்டும் அவர்கள் அதை கண்டு களிக்கவும் , உள் வாங்கவும் வேண்டும் .வளர்ந்து வரும் எமது இளம் சமுதாயம் , இளம் தலைமுறைகள் எமது கலைகளின் தொன்மையை வேராகக் கண்டு ஏனைய இனத்தவர்களும் தெரிந்து கொள்ள தமிழினத்தின் தொன்மையை தமிழக கலைகளின் தொன்மையை தெரிந்து கொள்ள வேண்டும் .

அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் நாடகக் கலையை வளர்ப்பதற்கான தேடலை வளர்க்க உந்து சக்தியாக இருக்க

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + eighteen =

*