;
Athirady Tamil News

ரயிலில் உட்கார இடம் கொடுக்க மறுத்த ஆண் பயணி: மடியில் உட்கார்ந்து கொண்ட பெண் செய்த செயல்..!!

0

அமெரிக்காவில் ஓடும் ரயிலில் உள்ள இருக்கையில் ஆண் பயணி உட்கார இடம் கொடுக்காததால் அவர் மடியிலேயே பெண் பயணி உட்கார்ந்துள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது ரயிலில் உள்ள ஒரு இருக்கையில் வெள்ளை நிற சட்டை அணிந்த இளைஞர் உட்கார்ந்திருந்தார்.

அவர் அருகில் வந்த பெண்ணொருவர், தனக்கு அந்த இருக்கையில் உட்கார இடம் வேண்டும் என கேட்டுள்ளார்.

ஆனால் இளைஞர் எழ மறுத்த நிலையில் அவர் மடியிலேயே பெண் உட்கார்ந்துள்ளார், பின்னர் பெண்களுக்கு மரியாதை கொடுங்கள் என கூறியுள்ளார்.

இது குறித்த வீடியோவை அந்த பெண்ணே சமூகவலைதளத்தில் வெளியிட்டு இது நாங்கள் நடத்திய செட் அப் என தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த இணைய பயன்பாட்டாளர்கள் பெண்ணின் செயல் உண்மை போலவே இருந்தது என தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + eight =

*