;
Athirady Tamil News

சிறுமியிடம் அத்துமீறிய பிரித்தானிய பொலிஸார்: நீதிமன்றம் கொடுத்த அதிரடி தண்டனை..!!

0

பிரித்தானியாவில் பொலிசார் ஒருவர் 17 வயது சிறுமியிடம் அத்து மீறியதற்காக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானியாவின் Nottingham பகுதியின் wilford crescent east-ல் பொலிஸாராக பணியாற்றி வருபவர் Majud Hussain (41).

இவர் கடந்த ஆண்டு ஜூலை 16ம் திகதியன்று இரவு பணி முடிந்து தன்னுடைய காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்துள்ளார்.

Long Eaton பகுதியில் 14 மற்றும் 17 வயதுள்ள இரண்டு சிறுமிகள் இரவு நேர கேளிக்கை விடுதிக்கு வெளியில் நின்று கொண்டிருப்பதை பார்த்து விட்டு, அவர்களை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி தன்னுடைய காரில் ஏற்றியுள்ளார். பின்னர் அவர்கள் இருவரையும் McDonald-ற்கு அழைத்து சென்றுள்ளார்

அப்பொழுது ஒரு சிறுமிக்கு அவரது அம்மாவிடம் இருந்து போன் கால் வந்துள்ளது. தன்னுடைய பெயர் Matt, தீயணைப்பு படை வீரர் என அறிமுகமாகியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து இருவரையுல் காரில் ஏற்றி சென்றவர், 14 வயது சிறுமியை அவரது வீட்டில் இறக்கிவிட்டு, 17 வயது சிறுமியுடன் காரில் புறப்பட்டார். Stapleford பகுதியில் கார் சென்ற பொழுது, இருள் நிறைந்த பகுதியில் காரை நிறுத்தி விட்டு சிறுமியிடம் அத்துமீறியுள்ளார்.

இதுதொடர்பாக மறுநாள் காலையில் சிறுமியின் நண்பர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி, குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*