;
Athirady Tamil News

ஓடும் ரயிலில் சிக்கிக்கொண்ட பெண்ணின் புடவை: தரதரவென இழுத்துச் சென்ற திக் திக் நிமிடங்கள்..!!

0

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் ரயிலில் பெண் பயணி ஒருவரின் புடவை சிக்கி தர தரவென இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காஞ்சூர்மார்க் ரயில் நிலையத்தில் இந்த பதறவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

காஞ்சூர்மார்க் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் பெண் பயணி ஒருவர் இறங்குகிறார். ஆனால் அவரது புடவையின் ஒருபகுதி ரயிலில் சிக்கிக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் ரயில் புறப்படவும் சிக்கிய புடவையுடன் அவர் தர தரவென இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்

இச்சம்பவத்தை நேரில் பார்த்த ரயில்வே பொலிசார் ஒருவர் துரிதமாக செயல்பட்டு குறித்த பெண்மணியை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.

ஆனால் ரயிலின் வேகத்திற்கு ஈடுதர முடியாமல் அவர் நடைபதையிலேயே தடுமாறி விழுந்துள்ளார்.மட்டுமின்றி அங்கிருந்த ரயில் பயணிகளும் குறித்த பெண்மணியை காப்பாற்ற போராடியுள்ளனர்.

இதனிடையே துணிச்சல் மிகுந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்மணியை போராடி காப்பாற்றியுள்ளார்.இச்சம்பவத்தால் படுகாயமடைந்த குறித்த பெண்மணியை அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

மட்டுமின்றி நடைபாதையில் விழுந்ததால் மட்டுமே அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் என ரயில்வே பொலிசார் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × three =

*