;
Athirady Tamil News

நண்பர்கள் மீது அதிக அக்கறை காட்டிய காதலி: தாங்கிகொள்ள முடியாமல் ரத்த வெள்ளத்தில் மிதந்த காதலன்..!!

0

பிரித்தானியாவில் காதலி தன்னை விட நண்பர்கள் மீது தான் அதிக அக்கறை காட்டுவதாக நினைத்து, காதலன் தன்னை தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்துகொண்டு இருந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரித்தானியாவின் Preston பகுதியை சேர்ந்த Elliott Bowes (26) என்பவர், நடிகர் மற்றும் மாடலிங் துறையில் அதிக விருப்பம் உள்ளவர். இவர் தன்னுடைய காதலி Charlotte Hubbert (22) உடன் திருமணம் செய்யாமல் 12 மதங்களாக சேர்ந்து பிளாட் ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ம் தேதியன்று மது அருந்தியிருந்த Elliott, வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறிய காதலி Charlotte உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

நீ என்னை விட உன்னுடைய நண்பர்கள் மீது தான் அதிக அக்கறை காட்டுகிறாய் என கூறிக்கொண்டே அதிக கோபத்துடன், சுவற்றில் கையால் ஓங்கி குத்தியுள்ளார்.

இதனால் பயந்துபோன Charlotte உடனடியாக அங்கிருந்து கிளம்ப முற்பட்டுள்ளார். உடனே அவரை கட்டியணைத்த Elliott வெளியில் செல்ல வேண்டாம் என செல்லமாக கொஞ்சியுள்ளார். ஆனால் மீண்டும் Charlotte வெளியில் செல்வதக கூறவே, அதிக கோபமடைந்த Elliott 5 அங்குல சமையல் கத்தியை கொண்டு தன்னுடைய வயிற்றில் ஓங்கி குத்தியுள்ளார்.

இதில் அளவிற்கு அதிகமான ரத்தம் வெளியேறியதால் Elliott உடனடியாக மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதனையடுத்து கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட Elliott, Royal Preston Hospital-க்கு எடுத்து செல்லப்பட்டார்.

ஆனால் அடுத்த நாளே அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததை தொடர்ந்து, அவரது காதலி Charlotte தான் கொலை செய்ததாக நினைத்து பொலிஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக வழக்கினை விசாரித்து வந்த பொலிஸார் Charlotte மீது எந்த தவறும் இல்லை எனபது உறுதியான நிலையில் அவரை விடுவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 8 =

*