;
Athirady Tamil News

பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண்: சுவாரஸ்ய பின்னணி..!!

0

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் அமைந்துள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு பெண் ஒரு பானையில் அடைக்கப்பட்ட பாம்புடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.பாம்

கொத்தியதாக கூறி மனிதா தேவி (34) என்னும் அந்தப் பெண் மருத்துவமனைக்கு வந்தபோது அவரது கையிலிருந்த பானையில் பாம்பு ஒன்று இருந்ததைக் கண்டு அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.

மனிதாவுடன் வந்த உறவினர்கள், அவள் ஆபத்தான கட்டத்தை தாண்டினால் மட்டுமே பாம்பை விடுவோம் என்று கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

அவர்கள் அந்த பாம்பை ஒரு பானையில் அடைத்து பானையின் வாயை ஒரு வலையால் கட்டிக் கொண்டு வந்திருந்தனர்.

இன்று ஒரு நாள் மட்டுமே நான்கு பேர் பாம்பு கடித்ததாகக் கூறி சிகிச்சைக்காக வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து பலர் பாம்புகளால் கடிக்கப்பட்டதால் மருத்துவமனையில் பாம்புக் கடிக்கான மருந்து இருக்குமா என்ற ஒரு அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது

இதனால் ராஞ்சி ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், தங்களிடம் போதுமான மருந்து இருப்பதாகவும், சொல்லப்போனால் பாம்பு கடித்தால் வேறு எங்கும் செல்லாமல் தங்கள் மருத்துவமனைக்கே வருமாறும் கோரிக்கை வைத்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − eight =

*